Get APP in 

மே 17ம் தேதி வெளியகும் படங்களில் இருக்கும் ஒற்றுமை

வருகின்ற மே 17ம் தேதி 3 படங்கள் திரைக்கு வரவுள்ளது. இந்த 3 படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. அதாவது இந்த 3 படங்களில் நடிப்பவர்களும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்கள். 'மிஸ்டர் லோக்கல்' பட நாயகன் சிவகார்த்திகேயன் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு தொகுப்பாளராக உயர்ந்து இன்று முன்னணி நாயகனாக வலம் வருகிறார். அதேபோல 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்த கவின், 'நட்புனா என்னானு தெரியுமா' படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடரில் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் 'மான்ஸ்டர்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.