Get APP in 

பார்டர் ரஹ்மத் புரோட்டா ஸ்டால்

தமிழகத்தின் மிகவும் சிறந்த சுற்றுலா தலமான குற்றாலத்தில் குளித்தவுடன் அருகில் சுவையா சாப்பிட நீங்க மறக்காம  செல்ல வேண்டியது பிரானுர் ரஹ்மத் பார்டர் புரோட்டா கடை.

சுற்று வட்டத்தில் மட்டுமல்லாது உலக தமிழர்களுக்கு தெரிந்த ஒரு அடையாளம், இந்த புரோட்டா கடை, அத்தனை ருசி, சுவை, இங்கு புகழ் பெற்ற புரோட்டா மட்டுமல்ல வீச்சு பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, என பல வகைகள் உண்டு.மேலும் நாவில் சுவை நிற்கும் நாட்டுக்கோழி பிரியாணி, மற்றும் காடை பிரியாணி. இங்குள்ள உணவு வகைகள் இதனை சுவையாக திகழ காரணம் இக்கடையில் தயாரிக்கப்படும் தனிவகை மசாலாக்கள், இவர்களே பொடிகளை தயார் செய்வதால் இக்கடை சால்னா, பொரியல், அரப்பு எல்லாமே, தமிழகம் கடந்தும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளது. கடையினை கண்டுபிடிப்பது எளிது, செங்கோட்டை-பிரானுர் சாலையிலே உள்ளது. யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். பார்டர் பரோட்டா கடை என்று பல பெயரில் கடைகள் இருந்தாலும் தனித்துவம் வாய்ந்தது "பிரானுர் ரஹ்மத் பார்டர் புரோட்டா கடை" தான். 

Restaurant Name: Border Rahmath Parotta Stall
Timings: 12.00 PM to 11.20 PM
Place: Piranoor Border, Shenkottai, Tirunelveli District, Tamilnadu, INDIA.
Geo Location: https://www.google.co.in/maps/@8.9716355,77.2619824,19.25z
Bus Service: Nearest Bus Stand - Shenkottai - 2 km.
Train Service: Nearest Railway station - Senkottai - 2 km.
Nearest Airport: Thoothukudi - 104 km, Madurai - 160 km.