Get APP in 

நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகை

அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யாவின் 39வது படம் உருவாகவுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தில் 'விஸ்வாசம்' படத்தின் தொழில்நுட்ப குழுவினர் பணிபுரியவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 'விஸ்வாசம்' படத்தை போல சூர்யாவின் 39வது படமும் செண்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக உருவாக இருப்பதால் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.