Get APP in 

சிவகார்த்திகேயன் 'ஹீரோ' திரைப்படத்தில் இணைந்த நகைச்சுவை பிரபலம்

கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இவானா நடித்து வருகின்றனர். இதில் நடிகை இவானா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் நகைச்சுவை நடிகர் விவேக் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார். இதற்காக இவர் துபாய் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.