Get APP in 

தமன்னா, பிரபுதேவா நடிக்கும் 'காமோஷி’ படத்தின் டிரைலர் வெளியீடு

நயன்தாராவின் 'கொலையுதிர் காலம்' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'காமோஷி’ படத்தை இயக்குநர் சக்ரி டோலெட்டி இயக்கி வந்தார். இந்த படத்தில் நடிகை தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில், பிரபுதேவா, பூமிகா சாவ்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனிடையே பிரபுதேவா, தமன்னா ஆகியோர் நடிப்பில் 'தேவி 2'படமும் மே 31ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

'காமோஷி’ டிரைலர் : https://www.youtube.com/watch?v=T1SywUgGfzs

All Categories

Banner right

Most Popular